அமெரிக்காவில்
கலிபோர்னியாவின் அருகிலுள்ள சான் டியாகோ கல்லூரி மாணவர் ஒருவர் போதைப்
பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பிருப்பதாக தவறாகக் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டார்.
பிறகு அவரை காவல்துறையினர் அங்கு மறந்துவிட்டுவிட்டதால் 5 நாட்கள்,
குடிநீர், உணவு இன்றி, தனது சிறுநீரைக் குடித்து உயிர் வாழ்ந்துள்ளனார்.
இறுதியாக மயக்க நிலையில் இருந்த அந்த இளைஞரை காவல்துறையினர்
மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஜெயில்
அதிகாரி ஒருவர் கூறுகையில் எப்படி அந்த மாணவனை மறந்தார்கள் என்றே
தெரியவில்லை. கவனக்குறைவாக நடந்த அனைத்து சிறை அதிகாரிகள் மீதும் தக்க
நடவடிக்கை என மேலும் அவர் கூறினார். மேலும் மருத்துவச்செலவு முழுவதையும்
அவரே ஏற்றுக்கொண்டார்