பிரித்தானியாவில் உள்ள பிரபல பௌத்த பிக்குகளில் ஒருவரான பகலகம சோமரட்ண
பிக்கு பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக
ஐஸில்வேர்த் கிரவுண் நீதிமன்ற ஊடக அதிகாரி தெரிவித்துள்ளார்.
அவருக்கான தண்டனை ஜூன் முதலாம் திகதியில் வழங்கப்படும். ஒரு பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு மற்றும் 6 தகாத நடத்தை குற்றச்சாட்டு ஆகியற்றில் அவர் குற்றங்காணப்பட்டார்.
இந்தக் குற்றச்சாட்டுக்களை பிக்கு மறுத்திருந்தார்.
1970 கள் மற்றும் 80 களில் பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
65 வயதான இவர், குறைடனில் உள்ள தேம்ஸ் பௌத்த விகாரையின் தலைமை பிக்குவாவார். (பீபீசி தமிழோசை)