ஃபேஸ்புக் இணையதளம் பங்குவர்த்தகத்தில் நுழைகிறது. ஒரு பங்கின் விலை $38


Facebook fixed $38 for its share rate.

ஃபேஸ்புக் சமூக வலைத்தள நிறுவனம் முதல் தடவையாக பங்குச் சந்தை வர்த்தகத்துக்கு வரவுள்ள நிலையில், அதன் பங்கு ஒன்றுக்கு $38 என விலை நிர்ணயித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த பங்கு விலையை வைத்துப் பார்க்கையில் இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு 10,400 கோடி டாலர்களைத் தொடும் என்று கணிக்கப்படுகிறது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த இணைய சேவை நிறுவனத்தின் பங்குகளை வாங்க மக்களிடையே ஆர்வம் மிகவும் அதிகமாக உள்ளது.

மொத்தத்தில் தமது நிறுவனம் 42 கோடியே 10 லட்சம் பங்குகளை விற்பனைக்கு விடலாம் என இந்நிறுவனம் முன்னதாக கோடி காட்டியிருந்தது.

ஆனால் இந்த எண்ணிக்கையில் 25 சதவீதம் குறைவான எண்ணிக்கையிலான பங்குகளே விற்பனைக்கு விடப்படும் என பின்னர் அது தெரிவித்திருந்தது.

அமெரிக்க பங்கு வர்த்தக சரித்திரத்தில் ஒரு நிறுவனத்தின் பங்குக்கு கிடைத்த மிக அதிக விலைகளில் ஒன்றாக ஃபேஸ்புக் பங்கு நிறுவனத்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை அமைந்துள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now