மெக்சிகோ: பிளாஸ்டிக் பைகளில் 49 மனிதத் தலைகள். போலீசார் அதிர்ச்சி.


Drug gangs dumped 49 mutilated bodies on Mexican highway

மெக்சிகோவின் மாண்டெர்ரி நகரில் பிளாஸ்டிக் பைகளில் துண்டிக்கப்பட்ட மனிதத் தலைகளை போலிசார் கைப்பற்றியுள்ளனர்.சுமார் 49 தலைகள் துண்டிக்கப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு நெடுஞ்சாலையில் வீசியெறியப்பட்டுள்ளன.

மெக்சிகோவின் மாண்டெர்ரி நகரில் நெடுஞ்சாலையில் கருப்பு பிளாஸ்டிக் பைகள் கிடந்தன. அவற்றை கைப்பற்றிய போலீசார் அவிழ்த்து பார்த்தனர். அதில், தலை துண்டித்த நிலையில் பிணங்கள் இருந்தன. இதுபோன்று 49 பேர் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

மெக்சிகோவில் போதை மருந்து கடத்தல் முக்கிய தொழிலாக உள்ளது. இதனால் கடத்தல் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுவது சகஜம். அது போன்ற தகராறில் இந்த படுகொலைகள் நடந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now