
பிரபல
இந்தியா டிவி சேனல் புலனாய்வு செய்தி ஒன்றை வெளியிட்டது. இதில் ஐ.பி.எல்
தொடரில் பங்கேற்கும் வீரர்களுடன் ரகசியமாக உரையாடி உண்மைகளை
கண்டறிந்துள்ளது.
டெக்கான்
சார்ஜர்ஸ் அணிக்காக பங்கேற்கும் சுதிந்திரா என்ற வீரர், கடந்த ஆண்டு நடந்த
முதல் தர போட்டி ஒன்றில், டிவி நிருபரின் விருப்பத்திற்கு ஏற்ப
வேண்டுமென்றே நோ-பால் வீசியுள்ளார். இவர் ரூ. 60 லட்சம் கொடுத்தால்
ஐ.பி.எல் தொடரில் அணி மாற தயார் என கூறியுள்ளார்.
இதே போல கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் ஸ்ரீவாஸ்தவ் நோ-பால் வீச ரூ. 10 லட்சம் கேட்டுள்ளார்.
புனே
அணிக்காக விளையாடும் மோனிஸ் மிஸ்ரா அதிர்ச்சி தகவல் ஒன்றை
தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ) விதிமுறைப்படி
சர்வதேச போட்டியில் பங்கேற்காத வீரர்கள், ஐ.பி.எல் தொடரில் அதிகபட்சமாக
ரூ. 30 லட்சம் தான் பெற முடியும்.
ஆனால்
மிஸ்ராவுக்கு உரிமையாளர்கள் ரூ. 1.45 கோடி கொடுத்து தக்க வைத்துள்ளனர்.
இவருக்கு ரூ. 1 கோடி வரை கறுப்பு பணமாக கொடுத்துள்ளனர். சில நேரங்களில்
சொகுசு கார் போன்றவற்றை பரிசாக கொடுத்து இளம் வீரர்களை கவர்கின்றனராம்.
தற்போதைய ஐ.பி.எல் தொடரில் ஒரு அணிக்கு அணித்தலைவராக உள்ள வெளிநாட்டு வீரர் ஒருவரும் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இது
குறித்து பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசன் கூறுகையில், ஐ.பி.எல் நிர்வாக
கவுன்சில் கூடி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்
என்றார்.