உலக
அளவில் டாப் 20 அதிகாரமிக்க அம்மாக்கள் பட்டியலில், ஐக்கிய முற்போக்கு
கூட்டணி தலைவர் சோனியா காந்தி 6வது இடம் பிடித்திருக்கிறார். முதலிடத்தை
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பிடித்தார். உலகம்
முழுவதும் ‘அன்னையர் தினம்’ நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, அமெரிக்காவின் பிரபல பொருளாதார பத்திரிகையான போர்ப்ஸ் ஒரு
பட்டியல் வெளியிட்டது.
பொருளாதாரம், சமூக, அரசியலில் முக்கிய பங்கு உட்பட பல துறைகளில் ஆதிக்கம் செலுத்துதல், அவர்கள் சார்ந்த துறை மற்றும் வீட்டு நிர்வாகத்திலும் திறம்பட செயல்படுவதை அடிப்படையாக கொண்டு உலகின் அதிகாரமிக்க அம்மாக்கள் பட்டியலை வெளியிட்டது. அதில், அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன்(64) முதலிடத்தையும், பிரேசில் அதிபர் தில்மா ரவுசெப்(64), 2வது இடத்தையும் பிடித்தனர். பெப்சிகோ நிறுவனத்தின் தலைவர், இந்தியரான இந்திரா நூயி (56), இந்திய அரசியலில் முக்கிய அங்கம் வகிக்கும் சோனியா காந்தி (53) ஆகியோர் 3 மற்றும் 6வது இடத்தை பிடித்தனர்.
அமெரிக்க அதிபர் ஒபாமா மனைவி மிஷெல், மியான்மர் ஜனநாயக கட்சி தலைவர் ஆங்சான் சூசி ஆகியோர் 7 மற்றும் 20வது இடத்தை பிடித்தனர். மேலும், மெலிண்டா கேட்ஸ், ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டினெ லகார்டே, பேஸ்புக் சிஓஒ ஷெரில் சாண்ட்பெர்க் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பிடித்தனர்.