
சிறைத்
தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை
விரைவில் விடுதலை செய்யப் போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லவில்
நேற்றுமாலை இடம்பெற்ற ‘கோத்தாவின் போர்‘ நூல் வெளியீட்டு விழாவில்
பங்கேற்ற ஜனாதிபதி மகிந்த இந்து‘ நாளிதழின் செய்தியாளர்
ஆர்.கே.இராதாகிருஸ்ணனிடம் பேசும்போதே, “அவரை விரைவில் விடுதலை செய்வோம்“
என்று கூறியுள்ளார்.
சரத்
பொன்சேகாவின் விடுதலை தொடர்பாக நடுநிலையாளராகச் செயற்படுபவர் தற்போது
வெளிநாடு சென்றுள்ளார். அவர் நாடு திரும்பியதும், சரத் பொன்சேகா
விடுவிக்கப்படுவார் என்றும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
சரத்
பொன்சேகாவின் விடுதலை தொடர்பாக மகிந்த ராஜபக்சவுடன், ஜனநாயக தேசிய
கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிரான் அலஸ் தொடர்ச்சியான பேச்சுக்களை
நடத்தி வந்தார்.
தற்போது பிரித்தானியா சென்றுள்ள அவர் நாடு திரும்பியதும் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பிரித்தானியா சென்றுள்ள அவர் நாடு திரும்பியதும் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும்
18ஆம் திகதி வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனை,
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சந்திப்பதற்கு முன்னதாக சரத்
பொன்சேகாவின் விடுதலை இடம்பெறும் என்பது உறுதியாகியுள்ளது.
சரத் பொன்சேகா விடுதலை குறித்து அமெரிக்கா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது