
இம்முறை
துடுப்பாட்டத்தில் அசத்தும் ஷேவாக், புனே(57), புனே(87*), மும்பை(73),
ராஜஸ்தான்(63) அணிகளுக்கு எதிராக ஏற்கனவே அரைசதம் அடித்தார்.
தவிர டுவென்டி-20 வரலாற்றில் தொடர்ந்து 5 அரைசதம் அடித்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையும் படைத்தார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 பந்தில் அரைசதம் எட்டினார் ஷேவாக். இதன் மூலம் இத்தொடரில் அதிவேக அரைசதம் அடித்த இரண்டாவது வீரரானார்.
முதல் இடத்தில் ராஜஸ்தான் அணியின் ஓவேஸ் ஷா(19 பந்து, எதிர், பெங்களூரு) உள்ளார்.

