
ஆணும்,
ஆணும் அல்லது பெண்ணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டு வாழ்வதை
அங்கீகரிக்க வேண்டும் என்று பல நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள்
வலியுறுத்தி வருகின்றனர்.
ஓரின
சேர்க்கை திருமணத்துக்கு சில நாடுகள் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கி
உள்ளன. எனினும் இது சரியா தவறா என்ற விவாதம் உலகளவில் நடந்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில், ஓரின சேர்க்கை திருமணம் பற்றிய விவாதம் பரபரப்பாக நடந்து வருகிறது.
இதுவரை ஓரின சேர்க்கை திருமணத்தை எதிர்த்து வந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இப்போது திடீரென ஆதரவு தெரிவித்துள்ளார்.
மீண்டும்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் தேவையில்லாத வாக்குறுதிகளை ஒபாமா
கூறிவருகிறார் என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில்
குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மிட் ரோம்னி,
ஓரின சேர்க்கை திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
விர்ஜினியாவில்
உள்ள பல்கலைக்கழகத்தில் மிட் ரோம்னி பேசுகையில், அமெரிக்க கலாசாரத்தையும்,
குடும்ப பந்தத்தையும் சீர்குலைக்கும் வகையில் ஓரின சேர்க்கை திருமணம்
உள்ளது. இதை கடுமையாக எதிர்க்கிறேன். திருமணம் என்றால் ஒரு ஆணும், ஒரு
பெண்ணும் செய்து கொள்வதுதான். இந்த அடிப்படையை மீறிய எதுவும் திருமணம்
ஆகாது என்று தெரிவித்தார்.