‘த
ஃபினான்ஸ்’ நிறுவனத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்ததன் மூலம் தேசிய
சேமிப்பு வங்கி சந்தித்த பாரிய நட்டத்திற்கு கொழும்பு பங்குச் சந்தையில்
இடம்பெற்றுவரும் ஊழல், மோசடிகளே காரணம் என ஐக்கிய தேசியக் கட்சி
தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
‘த ஃபினான்ஸ்’ நிறுவனத்தின் பங்குகளைக்
கொள்வனவு செய்ததால், தேசிய சேமிப்பு வங்கிக்கு 150 மில்லியன் ரூபா நட்டம்
ஏற்பட்டுள்ளது. இந்தப் பங்குகள் தலா 49 ரூபா 74 சதத்திற்கு கொள்வனவு
செய்யப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் குறித்த பங்கொன்றின் பெறுமதி 30
ரூபா 30 சதமாகவே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கொழும்புப் பங்குச்சந்தையில் பாரியளவிலான ஊழல், மோசடிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
பொருளாதார வல்லுநர் ஹர்ஷ டி சில்வாவின்
குற்றச்சாட்டு குறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருடன் எமது செய்திப்
பிரிவு தொடர்புகொண்டு இதுகுறித்து கேட்டபோது, இதுகுறித்து விசாரணை
நடத்துவதற்கோ, ஆராய்வதற்கோ மத்திய வங்கிக்கு எவ்வித அதிகாரமும் இல்லையெனத்
தெரிவித்தார்.