மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இன்று மாலை 4 மணிக்கு
திறக்கப்படவிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புதிய
காத்தான்குடி அலுவலகம் இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து எரிகப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இக்கட்டிடத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அலுவலக கட்டிடம் முற்றாக சேதமடைந்துள்ளது.
புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் அமைக்கப்பட்டிருந்த இவ் அலுவலகம் இன்று மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கபடவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.