சமையல் எரிவாயு மற்றும் பால் மா ஆகியவற்றுக்கான விலைகளை அரசாங்கம் உயர்த்தியுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவிற்கான இறக்குமதி வரியை நேற்று அரசாங்கம் உயர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 163 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சமையல் எரிவாயுவிற்கான விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 350 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.