ஒரே
நேரத்தில் சூரியன் மறையும் காட்சியையும் சந்திரன் உதயமாகும் காட்சியையும்
கன்னியாகுமரியில் நாளை காணலாம். சித்ரா பவுர்ணமி நாளை (சனிக்கிழமை)
வருகிறது. நாளை மாலை அரபிக்கடலில் சூரியன் மறையும் அதே வேளையில் வங்காள
விரிகுடாவில் இருந்து சந்திரன் தனது ஒளியை வீசத் தொடங்கும்.
சித்ரா
பவுர்ணமியையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் அம்மனுக்கு
வைரக்கிரீடம் மற்றும் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை
நடக்கிறது.