
இந்தி
நடிகை ரேகா மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார். இந்திய
அரசியல் அமைப்பு சட்டப்படி கலை, இலக்கியம் போன்ற துறைகளில் சிறந்து
விளங்குபவா¢களை மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம்
உள்ளது. இந்த வகையில் காலியாக இருந்த 5 இடங்களில் இரண்டு இடங்களுக்கு
இந்தி நடிகை ரேகா மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை எம்பியாக
நியமித்து ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் உத்தரவிட்டார்.
இதை
தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினராக நடிகை ரேகா இன்று பதவியேற்றுக்
கொண்டார். அவருக்கு அவை தலைவர் அன்சாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சச்சின் டெண்டுல்கர் நியமனத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொது நல
வழக்கு தொடரப்பட்டது.
விளையாட்டு
துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு எம்பி பதவி வழங்க சட்டத்தில்
இடமில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்
நேற்று தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. சச்சின் நாளை பதவி
ஏற்றுக்கொள்வார் என தெரிகிறது.