மிகப்பெரிய ஆயுத தளபாடக் கொள்வனவுகளை மேற்கொள்ளவுள்ள இலங்கை!



விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் கழித்து, சிறிலங்கா அரசாங்கம் மிகப்பெரிய ஆயுத தளபாடக் கொள்வனவுகளை மேற்கொள்ளவுள்ளது.

சுமார் 3800 கோடி ரூபா பெறுமதியான ஆயுத தளபாடங்கள் சிறிலங்காப் படையினருக்காக ரஸ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளன.
இந்த ஆயுததளபாடக் கொள்வனவில் பெரும்பகுதி சிறிலங்கா விமானப்படைக்கே மேற்கொள்ளப்படவுள்ளது.
சிறிலங்கா விமானப்படைக்கு புத்தம்புதிய 14 போக்குவரத்து உலங்குவானூர்திகளை ரஸ்யாவிடம் இருந்து வாங்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 4ம் நாள் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சிறிலங்காவின் பாதுகாப்புச் அமைச்சரான சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இதற்கான பரிந்துரையை முன்வைத்திருந்தார்.
இந்த உலங்குவானூர்திகளை கொள்வனவு செய்வதன் மூலம் சிறிலங்கா விமானப்படை, 30 பேரை ஏற்றிச் செல்லக் கூடிய - இரட்டை இயந்திர - பலநோக்கு உலங்குவானூர்திகளையுடைய பெரியதொரு அணியைக் கொண்டதாக மாறவுள்ளது.
சிறிலங்காவுக்கு ரஸ்யா வழங்க இணங்கியுள்ள 300 மில்லியன் டொலர் (சுமார் 3800 கோடி ரூபா) கடனுதவியிலேயே இந்தக் கொள்வனவு மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன் இந்தக் கடனுதவியில் சிறிலங்கா இராணுவத்துக்கு நேரடியாக வாங்கப்பட்ட துருப்புக்காவி கவசவாகனங்கள் மற்றும் ஏ.என்-32 போக்குவரத்து விமானங்களின் பழுதுபார்த்தல் அல்லது புதியவற்றை மாற்றிக் கொடுக்கவும் ரஸ்யா முன்வந்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் மிகப்பெரிய ஆயுத தளபாடகக் கொள்வனவு இதுவாகும்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now