
பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உறங்கிக் கொண்டு இருக்கும்போது நிலக்கொள்ளையர்கள் புதையல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்,
அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது கலாசாரத்தை பாதுகாப்பதாகவும் தேசிய மரபுரிமைகளை பாதுகாப்பதாகவும் காட்டு சட்டத்தை அகற்றுவதாகவும் கூறியபோதும் சிறிய காலப்பகுதியில் பாரிய அளவு புதையல் தோண்டல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய நூதனசாலையில் கொள்ளையடிக்கப்பட்ட விலை மதிக்க முடியாத தங்க ஆபரணங்களுக்கு என்ன நடந்தது என இதுவரை தெரியவரவில்லை என கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
கலாசாரத்தை கொள்ளையிட அரசு பகிரங்கமாக இடமளித்து வருவதாகவும் விலச்சியில் விசேட அதிரடிப்படை - பொது மக்கள் மோதிக் கொண்டதை அடுத்து ´வழக்கும் தேரர்களதே பொருளும் தேரர்களதே´ என்று கிராம மக்கள் பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதையல் தோண்ட நவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அந்த நவீன ஆயுதங்களை நாட்டுக்கு இறக்குமதி செய்தவர்கள் யார்? அதற்கு இடமளித்தது யார்? அந்த நவீன இயந்திரம் யாரிடம் உள்ளது? போன்ற கேள்விகளுக்கு விடை தேட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என கயந்த கருணாதிலக தெரிவித்தார்.