
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்ட சாளம்பைக்கேணி-05 மற்றும்
சாளம்பைக்கேணி-01 ஆகியவற்றை இணைக்கும் உள்ளக வீதியில் அமைந்துள்ள பாலம்
உடைந்து பல மாத காலமாகியும் அது இன்னும் புனரமைப்பு செய்யப்படவில்லை.
இது போக்குவரத்துக்கு மிகவும் ஆபத்தான நிலையில் கவனிப்பாரற்றுக்
காணப்படுகிறது. இதனால பாடசாலைக்கு செல்லும் மாணவர்களும் விவசாயிகளும்
பயணிகளும் நாளாந்தம் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால்
வாகனங்களும் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. இது விடயத்தில்
சம்பத்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா?

