
இலங்கை
விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள இணைப்பு
இலங்கைக்கு முக்கியமான கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில வார
இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில்
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன் புதுடெல்லிக்கும்
கொல்கத்தாவுக்கும் மேற்கொள்ளும் பயணம் குறித்து நெருக்கமாகக்
கண்காணிப்பதற்கு கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பங்களாதேஷ்
மற்றும் இந்தியாவுக்கான பயணத்தை தொடங்கிய ஹிலாரி கிளின்டன் சீனா வழியாக
வாசிங்டன் திரும்பவுள்ளார். புதுடெல்லிப் பயணத்தின் போது அவர் இந்திய
வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெளிவிவகார அமைச்சின் செயலாளர்
ரஞ்சன் மத்தாய் உள்ளிட்ட இந்தியத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.
இந்தச்
சந்திப்புக்களில் பிராந்திய விவகாரம் குறித்து கலந்துரையாடும்போது இலங்கை
விவகாரம் குறித்து முக்கியத்துவம் கொடுத்து பேசப்படும் என்று ராஜபக்ச
அரசாங்கம் நம்புகிறது.
பத்து
நாட்களுக்குப் பின்னர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்
தலைமையிலான குழுவினரை வாசிங்டனில் சந்திக்கவுள்ள நிலையில் ஹிலாரி கிளின்டன்
இலங்கை விவகாரம் குறித்து கவனம் செலுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.
ஐ.நா.மனித
உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை
இந்தியாவுடன் ஆலோசித்த பின்னரே அமெரிக்கா கொண்டு வந்தது.
இந்தநிலையில்
தீர்மானத்திற்கு பிந்திய நிலைமைகள் குறித்தும் இந்தியாவின்
பங்களிப்புடனேயே அமெரிக்கா கணிப்பீடு செய்யவுள்ளது என்றும் கொழும்பு ஆங்கில
ஊடகம் வெளியிட்டுள்ளது.