பிரெஞ்ச்
ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ்
பூபதி, சானியா மிர்சா ஜோடி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று
அசத்தியது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
நேற்று
நடந்த கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் மகேஷ்
பூபதி-சானியா மிர்சா ஜோடி, போலந்தின் கிளாடியா ஜான்ஸ் இக்னேசிக்,
மெக்சிகோவின் சான்டியாகோ கொன்சாலஸ் ஜோடியுடன் மோதியது.
தொடக்கம்
முதலே பூபதி, சானியா ஜோடி தூள் கிளப்பினர். "டை-பிரேக்கர்” வரை சென்ற
முதல் செட்டை 7-6 என வென்றனர். இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய
இவர்கள், மிக எளிதாக வெற்றி பெற்றனர்.
இறுதியில் பூபதி-சானியா ஜோடி 7-6 (7/3), 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இது
பூபதிக்கு 12வது கிராண்ட்ஸ்லாம்(இரட்டையர் 4 + 8 கலப்பு இரட்டையர்)
பட்டமாகும். சானியாவுக்கு சீனியர் பிரிவில் 2வது கிராண்ட்ஸ்லாம்
பட்டமாகும். முன்னதாக பூபதியுடன் சேர்ந்து 2009ல் அவுஸ்திரேலிய ஓபன் கலப்பு
இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றார்.
மகளிர்
ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில், இத்தாலியின் சாரா இரானி 7-5,
6-1, 6-3 என்ற செட் கணக்கி்ல், தரவரிசையில் 6வது இடத்திலுள்ள
அவுஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசரை வீழ்த்தி முதன் முறையாக இறுதிச்
சுற்றுக்கு முன்னேறினார்.
ka.