நாட்டின் வருடாந்த வருமானத்தில் 96% கடன்களைச் செலுத்துவதற்கே பயன்படுத்தப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி காலத்தில் கடன் செலுத்தவென 30% வருமானமே பயன்படுத்தப்பட்டதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒன்றும் இல்லாமல் போயுள்ள அரசாங்கம் பணம் இருக்கும் இடத்தை தேடிப்பிடித்து அதனை சுருட்டி வருவதாகவும் ஊழியர் சேமலாப நிதி, தேசிய சேமிப்பு வங்கி நிதி என்பவற்றில் அரசின் கொள்ளை வெளிவந்துள்ளதால் தற்போது அச்செயலை கைவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது இலங்கை மின்சார சபை 26 பில்லியன், கனியவள கூட்டுத்தாபனம் 94 பில்லியன், இலங்கை போக்குவரத்து சபை 4 பில்லியன், இலங்கை விமான சேவை 19 பில்லியன் என அரச நிறுவனங்கள் 249 பில்லியன் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக லக்ஷமன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் இயலாமை மற்றும் செயற்திறனின்மைக்கு நாட்டு மக்களே நட்டஈடு செலுத்த வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.