பௌத்த பிக்குகள் பாராளுமன்றிற்குச் செல்வதை, அரசியலில் ஈடுபடுவதை அனுமதிக்க
முடியாது என அஸ்கிரி பீடாதிபதி உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரர்
தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதனால் மதத்திற்கும் அவர்களுக்கும் அவப்பெயரும், அசௌகரியங்களுமே ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றிற்கு தெரிவாகாமல் பக்தர்களுக்கு ஆலோசனை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டை ஆட்சி செய்வது குறித்து பௌத்த விஹாரைகளில் மதத் தொண்டு ஆற்றிக்கொண்டே அரசியல்வாதிகளுக்கு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றில் செயற்பாட்டு அரசியலில் ஈடுபடாமலேயே பௌத்த பிக்குகளினால் நாட்டுக்கு அளப்பரிய சேவைகளை ஆற்ற முடியும் என அஸ்கிரி பீடாதிபதி உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.