மதுபானத்தின் விலை நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 20 தொடக்கம் 40
ரூபா வரையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஸ்டிலறிஸ் கம்பனி
அறிவித்துள்ளது.
பியர் போத்தல்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற
போதிலும் அதிகரிக்கப்பட வேண்டிய விலை தொடர்பில் இன்னும்
தீர்மானிக்கப்படவில்லை என அக்கம்பனி தெரிவித்தது.
உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பால் மதுபானத்தின் விலையையும் அதிகரிக்க நேர்ந்ததாக அக்கம்பனி மேலும் குறிப்பிட்டது.