யூடியுப் உள்ளடங்களாக 20,000 இணையத்தளங்களை பாக்கிஸ்தான் அதிகாரிகள் முடிக்கியுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
'இன்னஸன்ஸ் ஒப் முஸ்லிம்' திரைப்படம் போன்ற ஆட்சேபனைக்குரிய விடங்களை
இணையத் தளங்களில் வெளியிடுவதால் இவ்வாறான இணையத்தளங்களை முடக்கியுள்ளதாக
அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
'முஹம்மது நபி (ஸல்) அலைஹிவஸ்ஸலம் அவர்களை களங்கப்படுத்தும் வகையில்
தயாரிக்கப்பட்ட திரைப்படம் போன்ற ஆட்சேபனைக்குரிய விடயங்களை வெளியிடும்
20,000 இணையத்தளங்கள் மற்றும் வலைத்தளங்களை நாங்கள் சட்டபூர்வமாக
முடக்கியுள்ளோம்' என பாகிஸ்தான் தொலைத் தொடர்புகள் அமைப்பு அறிவித்துள்ளது.
'இவ்விடயம் தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தின் கட்டளைகளை கடுமையாக
பின்பற்றுகின்றோம்' என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர்
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய 'இன்னஸன்ஸ் ஒப் முஸ்லிம்' திரைப்படம் மட்டும் இவ்வாறு
இணையத்தளங்கள் முடக்கப்படுவதற்கு காரணமில்லை. ஆயிரக்கணக்கான
இணையத்தளங்களில் இவ்வாறு சர்ச்சைக்குரிய விடயங்கள் பதிவேற்றம்
செய்யப்படுகின்றன. அப்படியான, தேவையற்ற இணையத்தளங்களையும் வலைத்தளங்களையுமே
நாங்கள் முடக்கியுள்ளோம் என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முஹம்மது நபி (ஸல்) அலைஹிவஸ்ஸலம் அவர்களை களங்கப்படுத்தும் அமெரிக்கரின்
திரைப்படத்தினால் பாக்கிஸ்தானில் மிக குரூரமான முறையில் வன்முறைகள்
வெடித்ததுடன் இதன் பெறுபேறாக 23 உயிரிழப்புகள் ஏற்பட்டும் பில்லியன் ரூபா
பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டும் உள்ளதாகவும்
பாகிஸ்தான் தொலைத்தொடர்புகள் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.