பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அப்துர் ரஸ்ஸாக்கிற்கும் அணியின் தலைமைத்துவத்துக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
உலகக் கிண்ண இருபதுக்கு-20 தொடரின் இலங்கைக்கு எதிரான அரையிறுதிப்
போட்டியில் தாம் இணைத்துக்கொள்ளப்படாமைக்கு அணித் தலைவர் முஹமட் ஹபிஸே
காரணம் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அணியின் நிர்வாகத்துக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் இலங்கையிடம் தோல்வியைத் தழுவியது.
அப்துல் ரஸ்ஸாக் இணைத்துக்கொள்ளப்படாமை குறித்து ஏற்கனவே விமர்சனங்கள் எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.