சர்வதேச குழு: இஸ்லாமியப் புனிதத்துவங்களை அவமதிக்கும் செயற்பாடுகள்,
இஸ்லாமிய எழுச்சியின் பரவல் தொடர்பான கவலைகளின் விளைவாகும் என நைஜீரிய
அறிஞரொருவர் தெரிவிக்கின்றார்.
நைஜீரியாவிலுள்ள அல்ரசூல் அல்அஸாம் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் சாலிஹ்
முஹம்மத் அல்தானி இக்னாவுக்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இஸ்லாமிய
எழுச்சியும் மக்கள் மத்தியில் இஸ்லாத்தின் மீது அதிகரித்து வரும் ஆர்வமும்
மேற்கின் கலாசாரச் செல்வாக்கை வீழ்த்தி அவற்றை பலவீனப்படுத்தி வருகின்றது
என்றார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், இஸ்லாத்திலும் இஸ்லாமிய எழுச்சியிலுமுள்ள
ஆர்வம் எதிரிகளின் உள்ளத்தில் பெரும் திடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது,
இதனாலேயே இஸ்லாமிய புனிதத்துவங்களை அவமதிக்கும் மோசமான செயல்களில்
எதிரிகளின் ஈடுபடுகின்றனர் என்றார்.
இத்தகைய துர்ச்செயல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளும் போது
இயற்கையான பிரதிபலிப்பையும் கடமையையும் மறந்து விடலாகாது. முஸ்லிம்களாகிய
நாம், அண்மையில் வெளியிடப்பட்ட இஸ்லாத்தை அவமதிக்கும் அமெரிக்க சியோனிச
திரைப்படத்திற்கு எதிராக எமது எதிர்ப்பை வலிமையாக வெளிப்படுத்த வேண்டும் என
அல்தானி மேலும் குறிப்பிட்டார்.
இத்தகைய மோசமான செயல்களுக்கு எதிராக முஸ்லிம்களினால்
முன்னெடுக்கப்படவில்லையெனில், இவை மேலும் தொடரும் வாய்ப்புள்ளது எனவும்
அவர் சுட்டிக்காட்டினார்.
இஸ்லாத்தை அவமதிக்கும் இத்தகைய செயல்களுக்கு அரபு நாடுகளின் ஊடகம்
போதியளவிலான எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை என்பதையும் அவர்
சுட்டிக்காட்டினார்.
சமயங்களை அவமதிக்கும் செயல், கருத்துச் சுதந்திரத்தின் ஒரு பகுதி எனும்
மேற்கின் வாதத்தை முற்றாக நிராகரித்த, கருத்துச் சுதந்திரம் என்பது குறித்த
வரையறைகளைத் தாண்ட முடியாது எனவும் குறிப்பிட்டார்.