இந்த நாட்டிலுள்ள விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், சட்டத்தரணிகள்
உள்ளிட்ட கற்றோர் ஏனையோருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் அமைச்சர்
மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அண்மையில் சட்டத்தரணிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் குறித்து நேற்று (10) ஜா-எல
பிரதேசத்தில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நடு வீதியில் பதாகை தூக்கிப்பிடிக்கும், சவப்பெட்டியை தூக்கித் திரியும்,
உருவ பொம்மை எரிக்கும் இந்த சட்டத்தரணிகள் ஞாயிறு பௌத்த சமய வகுப்புச்
சென்று சமயம் கற்றவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் கற்றோர், புத்திஜீவிகள் இவ்வாறு நடந்து கொண்டால் நாட்டு
எதிர்காலம் கடவுள் கைகளில்தான் என கூறியுள்ள அமைச்சர், நாட்டுக்கு பிழையான
முன்னுதாரணங்கள் காட்டப்படக்கூடாதெனவும் குறிப்பிட்டுள்ளார்.
கொடிபிடித்து, பதைகை ஏந்தி, சவப்பெட்டி தூக்கிச் செல்வதனால் ஜனாதிபதி
எதற்கும் பயப்பட மாட்டார் எனவும் பிரச்சினை இருந்தால் பேச்சுவார்த்தை மூலம்
தீர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் மேர்வின் சில்வா
தெரிவித்துள்ளார்.