கொழும்பு - புறக்கோட்டை பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள
போத்தலில் அடைக்கப்டப்ட குடிநீர் விற்பனை நிலையங்களில் கொழும்பு மாநகர
சபையின் சுகாதாரப் பிரிவு சுற்றி வளைப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இதன்போது பஸ்ரியன் மாவத்தை பஸ் தரிப்பு நிலையம் அருகில் உள்ள போத்தலில்
அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை நிலையங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களால்
விற்பனை செய்யப்படும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் சுகாதார
பரிசோதகர்களின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது சுகாதார அதிகாரிகளால் பெறப்பட்ட மாதிரி நீர் கொழும்பு மாநகர
சபையின் இரசாயன பகுப்பாய்வாளர்களினால் இரசாயன பகுப்பாய்வுக்கு
உட்படுத்தப்படவுள்ளது.
தண்ணீர்கட் குழாய்களின் மூலம் பெறப்படும் நீரை போத்தல்களில் அடைத்து
விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவலின் படி இவ் சுற்றிவளைப்பு
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.