இம்முறை இடம்பெறவுள்ள கொரிய மொழிப் பரீட்சைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும்
நிறைவடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
பத்தாவது கட்டமாக இம்முறை இடம்பெறவுள்ள கொரிய மொழிப் பரீட்சைகள் எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
இப்பரீட்சைகள் கொழும்பில் 9 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளது.
இம்முறைப் பரீட்சைகளின் போது 34,268 பேர் தோற்றவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இப் பரீட்சைகளின் போது மோசடிகளில் ஈடுபடும் பரீட்சாத்திகள், இரண்டு
வருடங்களுக்கு கொரிய மொழிப் பரீட்சையிற்கு முகங் கொடுக்க முடியாது.