சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவரான மற்றும் பலாபன ரயில் நிலையங்களுக்கு
இடையில் மைக்குளம் பிரதேசத்தில் ஓடும் ரயிலில் மோதுண்டு ஒருவர் தற்கொலை
செய்து கொண்டுள்ளார்.
கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த அலுவலக ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (08) இரவு 07.45 அளவில் இடம்பெற்றுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட 41 வயதுடைய நபரின் சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.