இரண்டு நிறுவனங்கள் மூலம் இலங்கையில் - 8 லட்சத்துக்கும் அதிகமான கருக்கலைப்புக்கள்!

இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் கடந்த 26 ஆண்டுகளில் சுமார் 8, 81, 077 கருக்கலைப்புக்களை மேற்கொண்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொட்டஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.


இதில் 877963 கருக்கலைப்புச் சம்பவங்கள் உபகரணங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏனைய கருக்கலைப்புச் சம்பவங்கள் மாத்திரைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்களும் சிங்களப் பெண்களுக்கு குடும்பக் கட்டுப்பாட்டு சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதன் மூலம் சிங்கள இனத்தை இல்லாதொழிக்க சர்வதேச சூழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த சூழ்ச்சித் திட்டத்தில் தமிழ் மக்களும் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளனர்.

சில வைத்தியர்கள், குடும்பநல உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு இந்த முயற்சிக்காக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்களிடம் 800 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் காணப்படுகின்றது.

அவற்றை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கலபொட்டஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now