மியான்மருக்கு ஒபாமா வருவதையொட்டி அந்நாட்டின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 452 கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடைபெற்று வந்த மியான்மரில், ஜனநாயகம் தொடர்பான சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகின்றன. அதிபராக தெய்ன் சீனும், எதிர்க்கட்சித் தலைவராக ஜனநாயகப் போராளி ஆங் சான் சூச்சியும் உள்ளனர். இந்நிலையில், அந்நாட்டுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா திங்கள்கிழமை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ஒபாமாவின் வருகையையொட்டி வெளிநாட்டினர் உள்ளிட்ட 452 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு சிறைத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில் அரசியல் கைதிகளும் அடங்குவர்.
இது குறித்து ஆங் சான் சூச்சியின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ""அரசின் இந்நடவடிக்கையை வரவேற்கிறோம். அதே சமயம் பொதுமன்னிப்பு வழங்குவதில் அரசுக்கு உண்மையான அக்கறை இருந்திருக்குமானால், அதை ஒபாமா வருவதற்கு முன்பே மேற்கொண்டிருக்கலாம்'' என்று தெரிவித்துள்ளார்.