இலங்கையின் தென் பகுதி கல்வி
அபிவிருத்திக்கு அமெரிக்கா உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான
அமெரிக்கத் தூதரகத்தின் ஊடாக இந்தத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.
தென் பகுதி பாடசாலைகளில் ஆங்கில மொழி கற்கை நெறிகள் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளன.
இளம் மாணவ மாணவியருக்கு இடையில் ஆங்கில
மொழியறிவை மேம்படுத்தும் நோக்கில் விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.
பல்கலைக்கழக, உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கு ஆங்கில மொழிப்
பயிற்சி வழங்கப்பட உள்ளது.
கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ
மாணவியருக்கு இந்தப் பயிற்சிகள் அதிகளவில் வழங்கப்படுவதாகத்
தெரிவிக்கப்படுகிறது. இந்த பயிற்சி திட்டம் தொடர்பில் கண்காணிக்கும்
நோக்கில் தூதுவர் மிச்சல் சிசன் தென் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார்.