இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி
மார்டி நட்டலெகவா நேற்று புதன்கிழமை கொழும்பை வந்தடைந்துள்ளதாக,
வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின்
அழைப்பையேற்றே இவர் இலங்கை வந்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவை இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர் இன்று மாலை சந்திக்கவுள்ளார்.
இலங்கை மற்றும் இந்தோனேஷிய இணை ஆணைக்குழு
கூட்டமும் வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு வெளிவிவகார
அமைச்சர்களும் அண்மையில் இந்தோனேஷிய, பாலி நகரில் பேச்சு நடத்தியமை
குறிப்பிடத்தக்கது.