யுத்த
பாதிப்புக்குள்ளான வட பகுதியில் குறிப்பாக கிளிநொச்சி, யாழ்ப்பாணம்,
முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இந்திய அரசு பல்வேறு உதவிகளை மேற்கொண்டு
வருகிறது. இந்த பிரதேசத்தில் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு
இந்தியா உதவி செய்கின்றமை மகிழ்ச்சியான விடயமே. பாடசாலைகள் அபிவிருத்தி
வீட்டுத்திட்ட உதவிகள் போக்குவரத்து உட்கட்டுமாண துறைகளில் உதவிகள் என
இந்திய அரசின் உதவிகள் காணப்படுகின்றது. அதேபோல் இந்தியா தொடர்ந்தும்
வடபகுதியின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யும் என இந்திய வெளிவிவகார
அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
நேற்று(18) கிளிநொச்சிக்கு விஜயம்
மேற்கொண்ட அவர், பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளை புனரமைக்கும் இந்திய
அரசின் உதவி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட கிளிநொச்சி சிவபாதகலையக
அ.த.க.பாடசாலையினை திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு
தெரிவத்துள்ளார்.
இந்நிகழ்வில் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ்,
டக்ளஸ் தேவானந்தா, றிஷாட் பதியூதீன், ஜி.எல்.பீரிஸ், வட மாகாண ஆளுநர்
சந்திரசிறி, இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே காந்தா, இலங்கைக்கான
இந்திய துணை தூதுவர் மகாலிங்கம், இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத்
காரியவசம், கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், திணைக்களங்களின்
உயரதிகாரிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்
