இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சுழற்சி முறையிலான தொழிற்ச்சங்க நடவடிக்கையை இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளவுள்ளனர். மின்சார சபை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 25 வீதத்தால் உயர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் இவர்கள் 45 சதவீத சம்பள உயர்வை வலியுறுத்தியே இச் சுழற்சி முறையிலான தொழிற்ச்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளனர்.
ஊழியர்களின் சம்பளத்தை 18 வீதத்தால் உயர்த்துவதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்திருந்த போதிலும் இதற்கு தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை.
எனினும் அடிப்படை சம்பளத்தை 25 வீதத்தால் உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் நேற்றைய தீர்மானத்திற்கும் இணக்கம் தெரிவிக்க முடியாதென ஊழியர் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
எவ்வாறாயினும் 45 சதவீத சம்பள அதிகரிப்பையே தாங்கள் எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சாரசபை தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
எனினும் பொது மக்களுக்கான மின்சார சேவை எதுவித தங்கு தடையின்றி தொடர்ச்சியாக வழங்கப்படும் என தெறிவிக்கப்படுகின்றது
