
ஈரான்
அணுகுண்டு தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அமெரிக்கா, இஸ்ரேல்,
இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதையும்
மீறி ஈரான் அணுகுண்டு தயாரித்து வருவதாக தெரிகிறது. இதனால் ஈரானை அமெரிக்கா
தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல ஈரானின் நிரந்தர எதிரி
நாடான இஸ்ரேலும் தாக்குதல் நடத்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்து
இருப்பதாக கூறப்படுகிறது.
இது
தொடர்பாக ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜிலாரோ கூறியதாவது:- அமெரிக்காவும்,
இஸ்ரேலும் ஈரானை தாக்கலாம் என்று நினைத்தால் இது பெரும் தவறாக அமைந்து
விடும். அது பேரழிவுக்கு அழைத்து செல்லும் வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு
தாக்குதல் நடந்தால் அது சங்கிலி தொடர் போல பல பிரச்சினைகளை
ஏற்படுத்தாலம்,அது எங்கு போய் முடியும் என்பதையும் சொல்ல முடியாது.
அகதிகள்
பிரச்சினை போன்றவையும் தலை தூக்கலாம். எனவே இரு நாடுகளும் இதில் அத்து
மீறலில் ஈடுபடாமல் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.எல்லா
விஷயத்துக்கும் ராணுவ நடவடிக்கைகள் தீர்வாக அமையாது என்பதை உணர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
