மாணவியை கர்ப்பிணியாக்கிய இராணுவ சிப்பாய்க்கு விளக்கமறியல் _

குருணாகல் வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரை ஏமாற்றி கர்ப்பிணியாக்கிவிட்டு அவரை துரத்தியடித்த இராணுவ சிப்பாயொருவரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14 வயது பாடசாலை மாணவியொருவரை இராணுவத்திலிருந்து தப்பியோடிய சிப்பாயொருவர் ஏமாற்றி, அம்மாணவியுடன் மூன்று மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு விரட்டியடித்ததாக வெல்லவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றில் 9ஆம் ஆண்டில் கல்வி பயின்று வந்த குறித்த மாணவியை இராணுவத்திலிருந்து தப்பியோடிய 23 வயதுடைய சிப்பாயொருவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அழைத்துச் சென்று வதுருஸ்ச என்ற பிரதேசத்தில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளமை விசாரணையின் பின்னர் தெரியவந்துள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now