
மஹிந்த
– ரணில் ரகசிய உறவு என்ற தலைப்பில் ஐக்கியதேசியக் கட்சியின்
கிளர்ச்சிக்குழு உறுப்பினர்கள் அண்மையில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
செயற்குழுவின் அனுமதியின்றி கூட்டங்களையோ, ஏனைய நிகழ்வுகளையோநடத்தக் கூடாது
என கட்சித் தலைமைத்துவம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில்
இந்தநூல் வெளியீட்டு வைபவம் நடைபெற்றுள்ளது.
ஐக்கிய
தேசியக் கட்சியின் காலி மாவட்ட முன்னாள் பாராளுமன்றஉறுப்பினரும், முன்னாள்
பெத்தேகம ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளருமான லக்ஸ்மன் ஆனந்தலெனரோலினால்
இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் ரணில் பேணி வரும்
நெருங்கிய தொடர்பு கட்சியின்வீழ்ச்சிக்கு பிரதான ஏதுவாக அமைந்துள்ளது என
அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சபாநாயகர்
ஒருவரைத் தெரிவதற்கான போட்டியின் போது ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில்
வேட்பாளர் எவரும் நிறுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த
வருடம் ஒக்ரோபர் மாதம் 8ம் திகதி முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர் பாரத
லக்ஸ்மன் பிரேமசந்திர படுகொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தை சரியானமுறையில்
ரணில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என அவர் தமது நூலில் குற்றம்
சுமத்தியுள்ளார்.
இந்தப்
பிரச்சினையை ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் ரீதியான்நன்மைகளை ஈட்டப்
பயன்படுத்தியிருக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், ரணில்
விக்ரமசிங்க, கட்சி உறுப்பினர்களின்உறுப்புரிமையை ரத்து செய்து
பிரச்சினைகளை திசை திருப்பினார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பாராளுமன்ற
உறுப்பினர் புத்திக்க பத்திரண மற்றும் மாகாண சபைஉறுப்பினர் ஸ்ரீலால்
லக்திலக்க ஆகியோரின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டதன் மூலம்கொலன்னவா
சம்பவம் மூடிமறைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். கட்சியை பாதுகாக்க
வேண்டுமாயின் ரணிலும் அவரது அடிவருடிகளும் உடனடியாகநீக்கப்பட வேண்டுமென
மஹிந்த ரணில் இரகசிய உறவு நூலில் அவர் தெரிவித்துள்ளார்.
முதல்
கட்டமாக ஐயாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளதாகக்குறிப்பிட்டுள்ளார். இந்த
நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கிளர்ச்சிக்குழுஉறுப்பினர்கள்,
ரணில் உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை,
குறித்த நூல் வெளியீடு தொடர்பிலும், நூல்வெளியீட்டு நிகழ்வில் கலந்து
கொண்டு உரையாற்றியோர் தொடர்பிலும் ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு
நடவடிக்கை எடுக்கும் என கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ
அத்தநாயக்கதெரிவித்துள்ளார்.
