இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும்,
புகழ்பெற்ற அணுசக்தி விஞ்ஞானியுமான அப்துல் கலாம் நாளை இலங்கை வரவுள்ளார்.
இலங்கை வரும் இவர் 21ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்
நடைபெறும் மும்மொழி செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில்
கலந்துகொள்ளவுள்ளார்.
நாளை மாலை இலங்கை வரும் அப்துல் கலாம்,
மும்மொழித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும்
அதேவேளை, அன்றையதினம் பண்டாரநாயக்க சர்வ தேச மாநாட்டு மண்டபத்தில் மாண
வர்களைச் சந்தித்து அவர்கள் மத்தியில் கருத்துரை வழங்கவுள்ளதாக விஞ்ஞான
தொழில்நுட்ப சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார்.
இலங்கை வரும் புகழ்பெற்ற விஞ்ஞானியான
அப்துல் கலாம், தொழில்நுட்பம், விஞ்ஞான உற்பத்தி, நவீன உற்பத்தி
போன்றவற்றின் ஊடாக இந்தியாவின் பொருளாதார அபிவிருத்தியில் கூடுதல்
பங்களிப்பு செய்தார். இத்துறையில் இவருக்குக் காணப்படும் அனுபவங்களைப்
பெற்றுக்கொள்ளும் நோக்கில் எதிர்வரும் 22ஆம் திகதி மொறட்டுவை
பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இலங்கை விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள்,
துறைசார் வல்லுனர்களுக்கான செயலமர்விலும் இவர் கலந்துகொள்ளவிருப்பதாக
அமைச்சர் குறிப்பிட்டார்.
