பாடசாலை மாணவர்கள்
பயணிப்பதற்கென விசேட பஸ் சேவையில் ஈடுபடும் சாரதிகளுடைய அனுபவங்கள்
குறித்து ஆராயுமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
நேற்றைய தினம் கல்கிஸ்சைப் பகுதியில் தனியார் பஸ் ஒன்றுடன் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் மேதி விபத்துக்குள்ளானது.
இவ் வாகன விபத்தில் 9 மாணவர்கள் காயமடைந்தனர்.
அவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய
வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதோடு நான்கு
மாணவர்கள் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அத்துடன் மாணவர்களை ஏற்றிச் செல்லும்போது
அவர்களது பாதுகாப்பு குறித்து கூடிய கவனம் எடுக்குமாறு தேசிய சிறுவர்
பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்தே ஜனாதிபதியினால் இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
|
