
நாட்டின்
இலவசக் கல்வி முறைமையை இல்லாதொழிக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்கள் மட்டுமன்றி இலவசக் கல்வி முறைமையையும் அரசாங்கம் உதாசீனம் செய்து வருகின்றது.
தனியார்
பல்கலைக் கழகங்களை உருவாக்குவதனை அரசாங்கம் பிரதான இலக்காகக் கொண்டுள்ளது.
எனவே, பல்கலைக்கழகங்களில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுத்
திட்டங்களை முன்வைக்க வேண்டும்.
பௌதீக
வளப்பற்றாக்குறை, மாணவர்களுக்கான வசதிகள், விரிவுரையாளர்களின் சம்பள
அதிகரிப்பு உள்ளிட்ட சகல காரணிகளையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
துறைமுகங்கள்,
மின்சார உற்பத்தி நிலையங்கள், வீதிகள், பெருந்தெருக்களை அமைக்க
முடியுமாயின் என்று பல்கலைக்கழகங்களை அபிவிருத்தி செய்ய முடியாது என ரணில்
விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
