மின் கட்டணத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து இன்று (15) இறுதித்
தீர்மானம் அறிவிக்கப்படும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் மின் கட்டணத்தில் அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என ஆணைக்குழு
குறிப்பிட்டுள்ளது.
இன்று (15) மாலை 2 மணிக்கு கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து மின் கட்டண மாற்றம் குறித்து பொது மக்களுக்கு அறிவிக்கப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஒரு மின் அலகு தயாரிக்க தற்போது 18 ரூபா செலவிடப்படுவதாகவும் ஆனால் பொது மக்களிடம் இருந்து 13 ரூபாவே அறவிடப்படுவதாகவும் மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால் மின்சார சபைக்கு பாரிய நட்டத்தை எதிர்கொள்ள வேண்டி நேர்ந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.