சீன கரன்சியான யுவானின் மதிப்பு 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு.


            China currency strong against American dollar.

சீன கரன்சியான யுவானின் மாற்று மதிப்பு கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகரான மாற்று மதிப்பு இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 சீனாவின் துணை அதிபர் ஸி ஜின்பிங், அடுத்த வாரம் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அடுத்த ஆண்டு அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜின்பிங், அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் யுவானின் மதிப்பு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 ஒரு டாலருக்கு 6.29 யுவான் தந்தால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது. தொடர்ந்து இரண்டு நாள்களாக யுவானின் மதிப்பு உயர்ந்து வந்துள்ளது.

 சீனாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு கடந்த அக்டோபரில் 1,170 கோடி டாலர் அதிகரித்தது. இதனால் சீனாவின் மொத்த அன்னியச் செலாவணி கையிருப்பு 3 லட்சம் கோடி டாலருக்கும் அதிகமாகும்.

 மனித உரிமை பிரச்னை: சீன துணை அதிபர் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போது, மனித உரிமை மீறல் பிரச்னையை அமெரிக்கா எழுப்பும் என தெரிகிறது. திபெத் மற்றும் ஜின்ஜியாங் பகுதியில் அதிகரித்துவரும் மனித உரிமை மீறல் விஷயம் குறித்து சீனாவிடம் அமெரிக்கா தனது கவலையை எடுத்துரைக்கும் என்று அதிபரின் சிறப்பு உதவியாளர் டேனியல் ரஸ்ஸல் தெரிவித்தார்.

 அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் விடுத்த அழைப்பின் பேரில் சீன துணை அதிபர் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now