இந்த வாரம் அரசாங்கத்துடன் சுமுகமான
இணக்கப்பாடொன்று காணப்படாதுவிடின் பாணின் விலை 5 ரூபாவால்
அதிகரிக்கப்படுமென அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின்
தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
‘அரசாங்கத்தையோ
அல்லது அமைச்சர்களையோ நாம் சந்திக்காதுவிடின், அவர்களால் எங்களுக்கு
வரிச்சலுகை வழங்கமுடியாதெனின் பாணின் விலையை 5 ரூபாவால் அதிகரிப்பதற்கான
நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுவோம்’ என அவர் கூறினார்.
இது தொடர்பில் வர்த்தக அமைச்சரை சந்திப்பதற்கு அனைத்து இலங்கை பேக்கரி
உரிமையாளர்கள் சங்கம் முயற்சித்து வருவதாகவும் பாணிற்கான வரியை நீக்கத்
தவறின் இது வெள்ளிக்கிழமையிலிருந்து பாணின் விலையை அதிகரிப்பதற்கு
நிச்சயமாக இட்டுச் செல்லுமென அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள்
சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன