
அநுராதபுரத்தில் இம் முறை இடம்பெறவுள்ள
இலங்கையின் 64வது சுதந்திர கொண்டாட்டத்திற்கான சகல ஏற்பாடுகளும்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அதிகாரி
ஒருவர் தெரிவித்தார்.
அநுராதபுரத்திலுள்ள ஸ்ரீ சம்புத்தத்வ
ஜயந்தி மாவத்தையில் நாளை மறுதினம் 4ம் திகதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்
சுதந்திர தினத்திற்கான பிரதான வைபவம் இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு
கோலாகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் பாதுகாப்புப்
பலப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் புராதன நகரங்களில் ஒன்றான
அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள சுதந்திரதின பிரதான நிகழ்வை நேரில்
கண்டுகளிக்கவென ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வருகை தரலாமென
எதிர்பார்க்கப்படுவதால் பொது மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு
பொலிஸாருடன் முப்படையினரும் விசேட கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.