
நாட்டில்
சுமார் 70 பல்கலைக்கழக மாணவர்கள் சிறைச் சாலைகளில்
தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
சுட்டிக்காட்டியுள்ளது.
300க்கும்
மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றில்வழக்குத் தாடரப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்
அழைப்பாளர்சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் வகுப்பு தடைசெய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலவசக்
கல்வி உரிமையை உறுதி செய்து கொள்வதற்காக போராடி மாணவர்களே இவ்வாறு
அரசாங்கத்தினால் பழிவாங்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
தனியார் பல்கலைக் கழகங்களை உருவாக்கும் திட்டத்தை அரசாங்கம்கைவிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த
வருடம் அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டமாணவர்களின்
எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்
புலிகளுக்கு ஆதரவான தமிழ் புலம்பெயர் சமூகத்துடன் தொடர்புகளைப்பேணுவதாக
அரசாங்கம் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என
அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் வடக்கு தமிழ் இளைஞர்களுடன் தமது அமைப்பு நெருங்கியதொடர்புகளைப் பேணி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.