
முஸ்லிம் மக்களுக்கு தனியான ஓர் நிர்வாக அலகு அவசியம் என ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
புதிதாக
தென் கிழக்கு மாகாண சபை ஒன்று உருவாக்கப்பட்டு அதன்அதிகாரத்தை முஸ்லிம்
சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.
13ம்
திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டத்தைஅமுல்படுத்தும்
போது கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு தனியான ஓர் நிர்வாக அலகு
வழங்கப்படவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.
ஹசன் அலிதெரிவித்துள்ளார்.
காணி மற்றும காவல்துறை அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என அவர்கோரியுள்ளார்.
13ம்
திருத்தச் சட்ட மூலத்தை முழுமையாக அமுல்படுத்துவதனை; ஸ்ரீலங்காமுஸ்லிம்
காங்கிரஸ் கட்சி முழுமையாக ஆதரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை,
மட்டக்களப்பு, பொத்துவில், சம்மாந்துறை,கல்முனை மற்றும் முஸ்லிம் மக்கள்
செறிந்து வாழும் பிரதேசங்கள் ஒன்றிணைக்கப்பட்டுமுஸ்லிம்களுக்கு தனியான அலகு
உருவாக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் 13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வுத்திட்டத்தை அமுல்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தென் கிழக்கு மாகாணசபையை உருவாக்குவதன் மூலம் மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும்என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான
பேச்சுவார்த்தையின்மூலம் ஏனைய இன சமூகங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண
முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவினால்
அறிவிக்கப்பட்டுள்ள சர்வகட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளத் தயார் என அவர்
மேலும் குறிப்பிட்டுள்ளார்.