மீற்றர் டெக்ஸி கட்டணமும் உயர்வு
எரிபொருட்களின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப மீற்றர் டெக்ஸியின் கட்டணத்தை கிலோமீற்றருக்கு 2 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக இலங்கை மீற்றர் ரக்ஸி சேவைகள் சங்கம் அறிவித்துள்ளது.
முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 50 ரூபாவில் மாற்றம் ஏதும் இருக்காது. அதன் பின் கிலோமீற்றருக்கான கட்டணம் 30 ரூபாவிலிருந்து 32 ரூபாவாக அதிகரிக்கும். எமது பிரச்சினைகளைப் பேச எமக்கு என்று ஒரு சங்கம் தேவை. மீற்றர் டெக்ஸி சேவை ஒரு வளர்ந்து வரும் சேவை என்பதை அங்கீகரிப்பது அவசியம் என சங்கத்தின் செயலாளர் ஆர்.பி.லால் கலிங்க கூறினார்.
இந்த சங்கத்தின் அங்கத்தவர்கள் 800 வரையிலான வாடகை வாகனங்களை இயக்குகின்றனர். இவற்றில் முச்சக்கரவண்டிகள், வான்கள், கார்கள் என்பன அடங்குகின்றன எனவும் அவர் கூறினார்.
பஸ் நிறுவனங்கள் போலன்றி மீற்றர் டெக்ஸி உரிமையாளர்களால் கட்டணங்களை அதிகரிக்க முடியவில்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சங்கத்தை கூட்டி ஒரு தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
Labels:
விலைவாசி