பால்மாவின் விலைகளை அதிகரிப்பதற்கு அரசாங்கத்திடம் பால்மா விநியோக நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளன.
இந்த அனுமதி வழங்கப்பட்டால் 400 கிராம் பால்மாவின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கர், நெஸ்பிறே, மெலிபன், டயமன்ட் முதலான வர்த்தக நாமங்கள் கொண்ட
பால்மாவை விநியோகிக்கும் நிறுவனங்கள், இறக்குமதி, உற்பத்தி, விநியோக
செலவுகளை காரணம் காட்டி, விலைகளை அதிகரிப்பதற்கு அனுமதி கோரியுள்ளதாக
நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று தெரிவித்தது.
விலைகள் அதிகரிக்கப்படாவிட்டால் தமது தொழிற்துறை நெருக்கடியை
எதிர்நோக்கும் எனத் தெரிவித்துள்ளதுடன் இது குறித்து வர்த்தக அமைச்சர்
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் அவகாசத்தையும் இந்நிறுவனங்கள் கோரியுள்ளன்.
2012 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் ரூபாவின் மதிப்பை 3 சதவீதத்தால் குறைத்தமையானது, பால்மா இறக்குமதியில் எதிர்மாறான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 120 ரூபாவாக வீழ்ச்சியடைந்தமை இந்நிலைமை மிக மோசமடைந்ததாகவும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.