இங்கிலாந்தில்
நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக முகமது அமீர்,
சல்மான் பட், முகமது ஆசிப் ஆகியோருக்கு சிறைத்தண்டனை மற்றும் சர்வதேச
போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் 6 மாத தண்டனை காலம் முடிந்து முகமது அமீர் விடுதலை ஆனார்.
அவருக்கு
2 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் பாகிஸ்தான்
திரும்பும் அவர் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளார்.